நீங்கள் ஆட்சியைப் பிடிக்க மத்திய அரசுக்கு சுமை தரலாமா? நிர்மலா சீதாராமனின் சரமாரி கேள்வி!!
இந்தியாவில் பல மாநிலங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக தங்களை மீறிய இலவசங்களை மக்களுக்கு தருவதாக கூறி பட்ஜெட்டுக்கு இடையூறு தரும் வகையில் சிக்கிக் கொள்கின்றது.
அவ்வாறு இருக்கும் மாநிலங்களை செய்யும் விதமாக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது என்றால் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அதிகாரப்பூர்வ இதழில் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, சமீபக் காலமாக மாநிலங்கள் இலவசங்கள் தருவது குறித்த பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் இலவசம் என்றால் என்ன அது எவ்வாறு தர வேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
அதை விட்டுவிட்டு தங்களால் கொடுக்க முடியாத இலவசங்களையும் கூறி பல சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இனிவரும் நாட்களில் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளில் இலவசங்கள் அழிப்பதாக இருந்தால் அதை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பட்ஜெட்டில் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல மாநிலங்களும் பட்ஜெட்டை பார்க்காமல் இலவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து கூறி விடுகின்றனர்.
ஆனால் நாளடைவில் அவர் மாநிலங்களில் உள்ள பட்ஜெட்டுக்கு இணையாகாததால் அதனை மக்களுக்கு வழங்க முடியாமல் தவித்தும் வருகின்றனர்.
அந்த வரிசையில் டெல்லியில் ஏமாற்றியானது மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி வரும் பட்சத்தில் இதற்கான நிதிநிலை பட்ஜெட்டை மாநில அரசு தெரிவிப்பதில்லை. அதற்கு மாறாக இந்த நிதிச் சுமையை மத்திய அரசை ஏற்கும் நிலை வந்துவிடுகிறது.
நீங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக இலவசங்களை கூறிவிட்டு அதனை மத்திய அரசின் தலையில் சுமத்தலாமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த இலவசம் மின்சாரத்தால் பல நிறுவனங்கள் அவர்களுக்கான சேவை கட்டணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பொருளாதாரம் சீராக இருப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் வங்கி ரீதியாக பல திட்டங்களை வகுத்துள்ளார்.
இந்த மோடி ஆட்சி இருப்பதால் மத்திய அரசால் வங்கியில் இருந்து வழங்கப்படும் அனைத்தும் நேரடியாக மக்களுக்கும் மாநில மத்திய அரசுக்கும் செல்கிறது.
ஆனால் இதற்கு முன்பு இவ்வாறு காணப்படவில்லை. அதற்கு மாறாக முந்தைய ஆட்சியில் எல்லாம் அவர்களின் ஆதாயம் பெறுவதற்காக அனைத்தும் கிடைத்து வந்தது.
அந்த வரிசையில் மோடி அவர்கள் வங்கிகளுக்கு முதலீட்டை அதிகரித்தால் என தொடங்கி அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்களை மேம்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.