3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

3வது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் பலி!! கலை இழந்த வாடிவாசல்!!

தமிழக மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இருப்பினும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக் கூறி பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் அமல்படுத்தியதோடு நேற்று முதல் அலங்காநல்லூர்  அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற தொடங்கியது.

மேலும் நேற்று மட்டும் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கிட்டத்தட்ட 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அவனியாபுரத்தில் மட்டும் ஆயிரம் காலைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. காளையை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்ததோடு இதில் 355 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 750 க்கும் மேற்பட்ட காளைகள் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி பாய்ந்தது. இதில் முதல் மூன்று இடத்தை குறிப்பிட்ட சில மாடுபிடி வீரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒன்பது காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்திருந்த மாடுபிடி வீரர் அரவிந்த் சிடி பாய்ந்த காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காலை மோதியதில் பலியான முதல் மாடுபிடி வீரர் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மூன்றாவது இடத்தை தக்கவைத்து இருந்த மாடுபிடி வீரர் உயிரிழந்ததால் களம் சற்று கலை இழந்து காணப்படுகிறது.