உங்கள் ஞாபக திறன் அதிகரிக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஞாபகத் திறன் அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.சிலர் எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறது என்று புலம்புகிறார்கள்.கவலைன் கொள்ளாமல் தங்கள் ஞாபகத் திறனை அதிகரிக்க கீழே கொடுப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள்.
1)மீன்
மாணவர்கள் மீன் உணவை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மத்தி,சால்மன்,கெளுத்தி வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்திருக்கிறது.பப்ளிக் எக்ஸாம் எழுத மாணவர்கள் இப்பொழுது இருந்து மீன் உணவுகளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
2)உலர் பருப்பு
பாதாம்,வால்நட் போன்ற உலர் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.உலர் விதைகளில் வைட்டமின் சி,மெக்னீசியம்,ஆரோக்கிய கொழுப்பு போன்ற மூளையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
3)வாழைப்பழம்
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம்,இயற்கை சர்க்கரை போன்றவை அதிகளவு நிறைந்திருக்கிறது.
4)முட்டை
தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.
5)உலர் பருப்பு பொடி
பாதாம்,முந்திரி,வால்நட் போன்ற உலர் விதைகளை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
6)கீரை
வல்லாரை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
7)மஞ்சள் பானம் அல்லது மஞ்சள் பால்
தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு கிளாஸ் மஞ்சள் கலந்த பால் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீர் பருகி வந்தால் மூளையின் செயல்திறன் மேம்படும்.
8)அவகேடோ
இந்த பழத்த்தின் சதை பற்றை பாலில் கலந்து குடித்து வந்தால் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.
9)எலும்பு குழம்பு
ஆட்டு எலும்பில் குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.எலும்பு குழம்பில் புரோட்டீன்,அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது.இவை நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.