உங்களில் சிலருக்கு அடிக்கடி சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும்.கனமான பொருளை தூக்கினாலோ,மாடி படி ஏறினாலோ அல்லது வேகமாக நடந்தாலோ மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
அதேபோல் குளிர்காலத்தில் சுவாசம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதில் இருந்து மீள சிறந்த நிவாரணம் கீழே தரப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)ஒரு வெற்றிலை
2)மூன்று மிளகு
3)ஐந்து துளசி இலைகள்
செய்முறை விளக்கம்:
*வெற்றிலை ஒன்றை எடுத்து அதன் காம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
*பிறகு உரலை சுத்தம் செய்து நறுக்கிய வெற்றிலை,மூன்று கருப்பு மிளகு மற்றும் ஐந்து துளசி இலைகளை போட்டு இடித்தெடுக்க வேண்டும்.
*பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் உரலில் இடித்த வெற்றிலை கலவையை அதில் போட்டு கசாயமாக காய்ச்சி வடிகட்டி பருகி வந்தால் சுவாசப் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)ஒரு நொச்சி இலை
2)இரண்டு கற்பூரம்
3)இரண்டு கற்பூரவள்ளி இலை
செய்முறை விளக்கம்:
*முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
*சிறிது நேரம் கழித்து அதில் ஒரு நொச்சி இலையை கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*அதன் பிறகு ஒரு கற்பூரத்தை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு கற்பூரவள்ளி இலையை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)ஒரு துண்டு சுக்கு
2)இரண்டு திப்பிலி
செய்முறை விளக்கம்:
*அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி லேசாக சூடுபடுத்த வேண்டும்.
*பிறகு அதில் ஒரு துண்டு சுக்கை இடித்து போட்டு கொதிக்கவிட வேண்டும்.அடுத்து இரண்டு திப்பிலியை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.