புளி + உப்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட இரத்தக்கட்டும் நிமிடத்தில் குணமாகிவிடும்!!

Photo of author

By Divya

புளி + உப்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட இரத்தக்கட்டும் நிமிடத்தில் குணமாகிவிடும்!!

Divya

சில சமயம் அடிபடுதல்,கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடலில் இரத்தக் கட்டு ஏற்படுகிறது.இதனால் வீக்கம்,வலி போன்றவை அதிகமாக இருக்கும்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தீர்வு 01:

புளி
கல் உப்பு

முதலில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் புளியை போட்டு அரைக்க வேண்டும்.இந்த உப்பு புளி பேஸ்டை இரத்தக் கட்டு மீது பூசினால் அவை சீக்கிரம் வத்திவிடும்.

தீர்வு 02:

மஞ்சள் தூள்
வெந்நீர்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.பிறகு சிறிதளவு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.இந்த கலவையை இரத்தக் கட்டு மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 03:

ஆமணக்கு எண்ணெய்
நொச்சி இலை

முதலில் இரண்டு நொச்சி இலையை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் தள்ளிப்பு கரண்டி வைத்து இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த நொச்சி இலை பேஸ்டை அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து இரத்தக் கட்டு மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 04:

அமுக்கிரா கிழங்கு சூரணம்
பசும் பால்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை பருகி வந்தால் இரத்தக் கட்டு சீக்கிரம் குணமாகும்.