ரேஷன் அரிசியில் உள்ள சத்துக்களால்.. இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்!!

Photo of author

By Jeevitha

நம் தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அரிசியில் எந்த ஒரு சத்தும் இல்லை என அதை மக்கள் பயன்படுத்துவது இல்லை.

மேலும் ரேஷன் அரிசியில் சமைத்தால் சாப்பாடு அளவில் பெரியதாகவும், கூழ் மாறி ஆகிவிடுவதால் அதை பெரிதும் பயன்படுத்துவதில்லை. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ரேஷன் அரிசியில் பல நன்மைகள் உள்ளன என தெரிவித்துள்ளது. ஆனால் அந்த ஃபோர்டிஃபைட் ரேஷன் அரிசியில் துத்தநாகம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. அதனால் இதை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ரத்த சோகை குறையும்.

மேலும் இதில் குறைந்த கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை உள்ளன. இதனால் உடல் பருமன் போன்ற நோய்களை குறைக்கும். ரேஷன் அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், உடலுக்கு எரிபொருளாக செயல்பட்டு மூளை சீராக செயல்பட உதவுகிறது. உடல் கார்போஹைட்ரேட்டுகள் வளர்சிதை மாற்றம் செய்து பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றுகிறது. ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தாமல் கிலோ ரூ.5 மற்றும் ரூ.10 க்கு விற்பனை செய்வதால்  வேதனை அடைந்துள்ளார்கள்.