பொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறைபாடுகள் குறைந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.அதனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இந்த நரம்பு தளர்ச்சி வந்துவிடுகின்றன. நரம்பு தளர்ச்சி இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான நேரத்தில் சரியான உணவு முறையை எடுத்துக் கொள்ளாததே நரம்புத் தளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் கை மற்றும் கால்களில் நடுக்கங்கள் ஏற்படும். அதே போல் எப்பொழுதும் அசதியாகவே இருப்பார்கள். தலைசுற்றல் மற்றும் தலைவலியை இந்த நரம்பு தளர்ச்சி உண்டாக்கும்.
இப்பொழுது பத்தே நாட்களில் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய கூடிய வீட்டு மருத்துவத்தைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த சுக்கு சிறிதளவு
2. மிளகு ஒரு ஸ்பூன்
3. அரிசித் திப்பிலி
செய்முறை:
1. முதலில் சிறிதளவு சுக்கு எடுத்து நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
2. பின் அந்த சுக்கை மிக்ஸி ஜாரில் போட்டு,ஒரு ஸ்பூன் அளவுக்கு அரிசி திப்பிலியை போடவும்.
3. ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகு போடவும்.
4. நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
5. ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கலந்து ஐந்து நிமிடம் அப்படியே விட்டு நன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.
6. டீ காபிக்கு பதில் இதை குடிக்க வேண்டும்.
7. டீ காஃபி தவிர்க்க முடியாது என்று நினைப்பவர்கள் காலையில் இந்த பொடி கலந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து டீ காபி குடிக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர நரம்புத் தளர்ச்சியினால் கை கால் நடுக்கம் ஆகியவை இல்லாமல் முற்றிலுமாக குணமாகும்.