“புதிய மின் இணைப்பு” இனி விண்ணப்பித்த 3 நாட்களில்! அரசின் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Kowsalya

தமிழ்நாடு முழுவதும் இனி புதிய மின் இணைப்பிற்கு மக்கள் விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் புதிய மின் இணைப்பை செய்து தரவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. அதனால் பொறியாளர்களை விரைந்து செயல்படுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களில் சரியான பராமரிப்பு இல்லாததால் இப்பொழுது பராமரிப்பு மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு நுகர்வோர்கள் விண்ணப்பிக்கும் பொழுது மூன்று நாட்களில் நுகர்வோரின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.

புதிய மின் இணைப்பு பெற வேண்டும் என்று நினைப்போர் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வீடுகள் உள்ளிட்ட தாழ்வழுத்த பகுதிகளுக்கு புதிய மின் இணைப்பைத் உருவாக்க வேண்டுமெனில் ஏற்கனவே உள்ள மின் அமைப்பை பயன்படுத்தி மின்சாரம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு வாரம் அல்லது 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என சொல்லியுள்ளது. அந்த இடத்தில் மின்கம்பம் நட வேண்டும் எனில் ட்ரான்ஸ்ஃபார்மர் வைத்து 90 நாட்களுக்குள் மிகாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும். என கால கெடு விதித்துள்ளது

ஆனால் ஒரு சிலர்கள் பணத்திற்காக வேண்டுமென்றே தாமதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்கள் உயர் அதிகாரிகள் வரைக்கும் சென்றுள்ளன.

எனவே ஏற்கனவே உள்ள மின் சாதனங்களை பயன்படுத்தி மின் இணைப்பு வழங்க கூடிய விண்ணப்பங்களுக்கு மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து பொறியாளர்களுக்கும் மின்சாரத்துறை கெடு விதித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை மின்சாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பயனடைவார்கள் மேலும் வருமானமும் கிடைக்கும் என்றும் சொல்லியுள்ளது.