இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்தி மீண்டு தங்கள் நடைமுறை வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் மீண்டும் இத்தொற்றானது உருமாற்றம் அடைந்துவிடுகிறது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அவ்ன்களின் வாழ்வாதாரம் அதிகளவு பாதிப்படைந்துவிடுகிறது.தற்பொழுது தான் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கள் முடிவுக்கு வந்தது.அதனையடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானக உருமாற்றம் அடைந்து மீண்டும் அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி பரவி வருகிறது.
இந்தியாவில் இந்த ஓமைக்ரான் தொட்றானது முதலில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.மாநில அரசுகளும் தொற்றை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் நமது தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பேருந்து, பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்திலும் 50 %மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.அதேபோல ரயில்களில் பயணிப்பவருக்கும் புது கட்டுப்பாடுகளை அமல்படுதியுள்ளனர்.
அவற்றில் இன்று முதல் மின்சார ரயில்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.பயணச்சீட்டு வழங்கும் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் முன்பு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இவர்களை தவிர சாதரான பயணிகள் மற்றும் சீசன் பயணிகள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.அதே போல சீசன் பயணிகளுக்கு வரும் காலங்களில் அவர்களிம் டிக்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழின் எண் அச்சிட்ட திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளனர்.எனவே இனி ரயில்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் இரண்டு தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம்.இரண்டு தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் பயணிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.