இது இல்லை என்றால் இனி மெடிசன் கிடையாது! மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிவிப்பு!
தமிழக அரசிற்கு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் பல்வேறு சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த மருந்து கடைகளில் மனநோய் மற்றும் தூக்கம் மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதனை உறுதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த சோதனைகள் சென்னையில் பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் அந்த கடையின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு அதன் உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்கள் மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுப்பதற்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.