கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை!

Photo of author

By Rupa

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை!

பெண்கள் வெளி உலகத்தில் நடக்கமாடவே  பயமாக இருக்கும் இக்காலத்தில் காவல் துறைதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.ஆனால் இந்த சம்பவம் அதன் தலைகீழாக உள்ளது. சமீபகாலத்தில் ஹைதராபாத்திலுள்ள ஒரு பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற அந்நிலையில் காவல் துறையினர் அந்த வழக்கை எடுத்து தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை பிடித்தனர்.பிடித்த குற்றவாளிகளை அந்த பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைத்து காவல் அதிகாரிகள்  சுட்டுக்  கொன்றனர்.இந்த சம்பவம் மக்களிடயே போலீசார் மீது அதிக மரியாதையை உருவாக்கியது.இந்த வழக்கின் தீர்ப்பானது தப்பு செய்யும் மனிதர்களிடையே ஒரு வித பயத்தையும்  ஏற்படுத்தியது.

இனி இவ்வாறு சம்பவம் நடக்காது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற  சம்பவம் மக்களிடயே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இம்மாதிரியான  குற்றவாளிகள் எந்த மாதிரியான தண்டனைக்கும் அசராதவர்கள் என மக்களிடம் கூறுவது போல் தோன்றியது.

தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவி காண்ட்ளக்கோயாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் மருந்தியல் இளங்கலைப் பட்டம் படித்து வருகிறார்.மாலை கல்லூரி முடிந்ததும்  வீடு திரும்ப ஆட்டோவில் ஏறியுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை ஆட்டோ ஓட்டுனர் பயன்படுத்திக்கொண்டு செல்லும் வழியில் ஜோடிமெட்லா என்னும் புறநகர் பகுதியில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

ஆட்டோ நின்றதும் மாணவியிடம் ஆட்டோ பழுதுபார்ப்பது போல் ஆட்டோ ஓட்டுனர்  நடித்துள்ளார்.பிறகு இவர் முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்த வேனை வர சொன்னார்.அந்த மாணவியிடம் இந்த வேன் நீ செல்லும் ஊர் பக்கம் தான் செல்கிறது என கூறியுள்ளான்.இதையறியாத அந்த மாணவி அந்த வேனில் ஏறி சென்றுயுள்ளார்.அந்த வேன் யாரும் இல்லாத முள் காட்டுப் பகுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்றது.அந்த ஆட்டோ ஓட்டுனரும் வேன் பின்னே வந்துள்ளான்.

அந்த மாணவியை  அங்குள்ள முள் புதற்குள் வைத்து ஆட்டோ ஓட்டுனர் முதல் நான்கு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.பிறகு மாணவியின் ஆடைகளை எடுத்து சென்றுள்ளனர்.மயக்கம் தெளிந்தவுடன் அந்த மாணவி உள்ளூர் வாசி பெண்மணியிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.அவர்கள் அந்த பெண்ணுக்கு தங்களது ஆடைகளை கொடுத்து உதவியுள்ளனர்.பிறகு அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து கீசரா காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார் சம்பவம் நடந்த இடம் கட்கேசர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என வழக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.இதனையடுத்து மாணவிக்கு நடந்த கொடூரம் பெருமளவில் பரவவே,உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு பிறகு கீசரா காவல் நிலையம் வழக்கை எடுத்துக்கொண்டது.

காவல் அதிகாரி வழக்கு பதிவு செய்து பின்னர் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் இருந்து ஆதாரங்களை திரட்டுகின்றனர்.மேலும் குற்றம் நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்தும் குற்றவாளிகளை தேடிகைது செய்துள்ளனர்.இந்நிலையில் போலீசார் மாணவியிடம் விசாரித்த போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மாணவியிடம் நன்றாக பழகி வந்தது தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தின் மூலம் பொதுப்படையாக மக்கள் நன்றாக பேசுகிறார்கள் மற்றும் நன்றாக பழகுகிறார்கள் என யாரையும் கண்மூடி தனமாக நம்புவது தவறு என அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது.