உத்திரபிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பிரசிபிக்க கூடிய பெண்களுக்கு 1000 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை நிதி உதவி ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெறுவதற்காக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தி இதுவரை ரூ.45,000 ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முறைகேடு செய்யப்பட்ட பணத்திற்கான கணக்கு விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய தகவல்கள் பின்வருமாறு :-
1 பெண் 30 மாதங்களில் 25 முறைகள் பிரசவத்திருப்பதாகவும் 5 முறைகள் கருவுற்று இருப்பதாகவும் போலியான கணக்குகள் எழுதப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 35 வயது பெண்ணின் உடைய பெயரை தவறாக பயன்படுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 35 வயது பெண்ணினுடைய பெயரை தவறாக பயன்படுத்தி தேசிய சுகாதாரத் துறை திட்டத்தின் கீழ் இதுவரை 45 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடைபெற்ற இருப்பதாக சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த முறை கேட்டின் அடிப்படையில் இதுவரை சுகாதாரத்துறை அலுவலர்கள் 4 பேர் மற்றும் 1 ஏஜென்ட் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிரசவித்த பெண்களுக்காகவும் கருவுற்ற பெண்களுக்காகவும் அந்தந்த மாநில அரசுகள் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வரும் நிலையில் இடையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது மாநில அரசுகளுக்கு கெட்ட பெயர் பெற்று தருவதாகவும் இதனால் ஏழை எளிய பயன்பட வேண்டிய பெண்கள் ஏமாற்றமடைந்த நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.