பெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா..!!

0
225

பெண்குழந்தையை கர்ப்பத்தில் தாங்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தை பிறந்தபின் அது பெண் தான் என்று அறியும் போது பெரியவர்கள் கூறியது சரி என்று தெரியவரும்.

இன்று கருத்தரித்து சில மாதங்களுக்குள் ‘ஸ்கேன்’ செய்து என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், பண்டைக் காலத்தில் இதுபோன்ற நவீன கருவிகள் எதுவும் இல்லை.

குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஆசை தான். இதனால் பலருக்கும் மகிழ்ச்சியும் உண்டாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால், என்ன குழந்தை என்று கண்டறிவதனால் சில வட்டாரங்களில் இருந்து தீங்கு விளைவிப்பதாக செய்திகள் கேட்கின்றோம். வளரும் சிசு பெண்ணாக இருந்தால் கருச்சிதைவு செய்து கொண்ட பல பெண்களை கதைகளிலும் செய்திகளிலும் நாம் காண்கின்றோம்.

பெண் குழந்தையை கருத்தரிக்கும் பெண்ணின் வயிறு பெரிதாக இருக்க காரணம் உண்டு. கர்ப்பம் தரிப்பதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் பெரிதாக காணப்படுவதில்லை. ஆனால், ஆண் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவங்களை விட பெண் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவங்கள் சற்று கூடுதலாக இருக்கும். இதனால் பெண் குழந்தையை கருத்தரித்த பெண்ணின் வயிறு பெரிதாக இருக்கும்.

Previous articleஅருள் மொழி வர்மன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! அடுத்து தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 3!!
Next articleகல் உப்பை வைத்து இதை மட்டும் செய்து விடாதீர்கள்!