பெண்கள் ஏன் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது?

Photo of author

By Parthipan K

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை மனு மகரிஷி முதல் வைகுண்ட சுவாமி வரை பலரும் போதித்துள்ளனர். இவற்றை இன்றைய பெண்ணுரிமை வாதிகள் அங்கீகரிப்பது மிக அபூர்வம்.

ஆனால் முன்னோர்கள் விதித்திருந்த ஆசாரங்களை பெண்கள் கடைபிடிக்க தயாரானால் அது குடும்பத்துக்கும், நாட்டுக்கும் அதன் விளைவாக பிரபஞ்சத்துக்கும் நன்மை உண்டாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெண்கள் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது என்று பழைய தலைமுறை எப்போதும் ஞாபகப்படுத்துவது உண்டு. அது அகங்காரத்தின் அறிகுறி என்று அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் நவீன யுகத்தில் பல பெண்களும் ஆண்களுக்கு சமமாக நினைப்பது இதுபோன்ற சில விஷயங்களில் மட்டுமே என்பதை காணலாம். கால் தாழ்த்தி வைத்திருப்பதாலோ, ஆண்களையோ, முதியோர்களையோ கண்டால் எழுந்து மரியாதை செலுத்துவதையோ பெண்கள் ஒரு குறைபாடாக கருதி வருகின்றனர்.

ஆனால் பெண்கள் எப்போதும் கால் மேல் கால் வைத்து அமரும் வழக்கம் இருந்தால் அது தீமை விளைவிக்கும் என்பது மருத்துவத்துறை கூறுகிறது. அப்படி செய்வது திருமணமனமானவர்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் தீங்கானது.

கால் மேல் கால் வைத்து அமரும் பழக்கம் இருந்தால் பெண்களுக்கு காலப்போக்கில் கர்ப்பப்பை சேதமடைய வாய்ப்பு உண்டு என்பதை முன்னோர்கள் புரிந்து கொண்டுதான் இந்த போதனையை விட்டுச் சென்றனர் போலும்.