பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த பெண்! வைரலாகும் வீடியோ

Photo of author

By Anand

பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த பெண்! வைரலாகும் வீடியோ

 

தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தி்ன் தலைவர் அப்பகுதியிலுள்ள பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்திலுள்ள பஜூகுண்டா கிராமத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோயில் திருவிழாவில் பெண் தலைவர் கலந்து கொண்டுள்ளார்.இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்றது தொடர்பாக சரித்தா ரெட்டி என்ற அந்த பெண்ணுக்கும் தலித் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

 

https://twitter.com/TeenmarMallanna/status/1601179594614509568

 

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சரித்தா ரெட்டி அங்கிருந்த 2 பட்டியலின ஆண்களை காலணிகளால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் நார்கேட்பள்ளி போலீசார் இது குறித்து சரித்தா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்