இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!!

Photo of author

By Jayachandiran

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி அதிகம் பேர் பார்த்துள்ளதால் சாதனையாக பதிவானது. இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதியதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

ஆஸ்திரேலியான் மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை தட்டிச் சென்றது.

பொதுவாக மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற அணிகள் மோதும்போது மட்டுமே அதிமான ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும். இந்த மைதானத்தில் 86,174 இருக்கைகள் உள்ளன. ஆஸ்திரேலிய பெண்கள் அணி எப்போது விளையாடினாலும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை.

சில நேரங்களில் மட்டுமே மைதானம் முழுக்க நிரம்பியிருந்த வேளையில், நேற்று நடந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மைதானம் முழுக்கு ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்திய அணி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும் மைதானத்தின் ஒட்டுமொத்த இருக்கையும் நிரம்பியதால் இந்த போட்டி சாதனையாக கருதப்பட்டது.