இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கற்பழித்த திமுக உடன்பிறப்புகள் கைது; பல வருடம் சீரழித்த கொடூர சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இறந்துபோன இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே அடக்கம் செய்யப்பட்டது.

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கற்பழித்த திமுக உடன்பிறப்புகள் கைது; பல வருடம் சீரழித்த கொடூர சம்பவம்!

இதற்கு மறுநாளே தனது தங்கையின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும் இளம்பெண்ணின் அண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் செய்யூர் பகுதி திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக பணியாற்றும் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் இளம்பெண் சசிகலா குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். மேலும் தனது காம இச்சைக்கு இணங்குமாறு கட்டாயமாக வற்புறுத்தி பல வருடங்களாக கற்பழித்து வந்துள்ளனர். ஆசைக்கு இணங்காவிட்டாம் வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி வந்துள்ளனர். பல்வேறு மன உளைச்சலில் இருந்துவந்த சசிகலாவிற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாகவே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று இளம்பெண்ணை புதைத்த இடத்திலேயே சசிகலாவின் அண்ணன் சுடுகாட்டிலேயே காத்திருக்கிறார். இளம்பெண்ணை திமுகவினர் மிரட்டி கற்பழித்த சம்பவம் செய்யூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment