பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பலி! குடும்பமே மயங்கிவிழுந்த பரிதாபம்!

Photo of author

By Jayachandiran

பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பலி! குடும்பமே மயங்கிவிழுந்த பரிதாபம்!

மாமனார் மைதா மாவுடன் பூச்சுக்கொல்லி மருந்தை வாங்கிவந்து வைத்ததை கவனிக்காமல் இரண்டையும் கலந்து போண்டா செய்து சாப்பிட்டதால் குடும்பமே ஆபத்தில் சிக்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் மக்கள் முடங்கி இருந்தாலும், பலர் இணையத்தில் நேரத்தை கழித்தும், உடற்பயிற்சி செய்வதும், புத்தகம் படிப்பதும், சுவையான உணவுகளை தயார் செய்வது போன்ற ஆர்வத்தோடு ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல வீட்டில் இருக்கும் போது குடும்பத்தினர் போண்டா செய்து சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

அரக்கோணம் எஸ்.ஆர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரிடம், அவரது மருமகள் பாரதி வீட்டில் போண்டா தயாரித்து உண்பதற்காக மைதா மாவு வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனால் மைதாமாவுடன் சேர்த்து தனது மிளகாய் தோட்டத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்தையும் வாங்கி வந்துள்ளார். இதை சற்றும் கவனிக்காத மருமகள் பாரதி மைதா மாவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தையும் ஒன்றாக கலந்து போண்டா செய்துள்ளார்.

சமைத்த போண்டாவை கவணர் சுகுமார், மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் குடும்பமே தலைசுற்றி மயங்கி விழுந்துள்ளனர். இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் அவரசமாக சேர்க்கப்பட்ட நிலையில், மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவர்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று அப்பகுதியினர் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.