மகளிருக்கு இலவச பயணம்! நெறிமுறைகளை விதித்தது தமிழக போக்குவரத்துத் துறை!

Photo of author

By Sakthi

கடந்த 7ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார் அதில் சாதாரண கட்டண நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் வெளியானது முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் மாபெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சாதாரண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் உயர் கல்வி பயின்றுவரும் மாணவிகள் உள்ளிட்ட எல்லோருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் மற்றும் பயண அட்டை இல்லாமல் கடந்த 8ஆம் தேதி முதல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மகளிருக்கான குழப்பத்தை நீக்கும் வகையில் நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது. தற்சமயம் பெண்களுக்கான இலவச பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக போக்குவரத்து துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இப்போது அந்த அறிவிப்பில் பேருந்துக்காக காத்திருக்கும் சமயத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும், வயதான பெண்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும், அதே போல பேருந்தில் பெண் பயணிகளிடம் அவர்களுக்குத் தொந்தரவு தரும் விதமாக கோபமாகவோ அல்லது ஏளனமாக பேசக்கூடாது. பேருந்தில் பெண் பயணிகளிடம் கனிவுடன் அதே நேரத்தில் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.