கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவது போன்று கர்ப்பம் தரித்த பிறகும் அதே அக்கறையை செலுத்த வேண்டியது அவசியம்.பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு உடல் மற்றும் மனதளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
குழந்தை பெற்ற பிறகு தாய்ப்பால் கொடுத்தல்,பிரசவ தொப்பை,பிறப்புறுப்பு தையல் வலி போன்ற பல விஷயங்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.குழந்தைகளை பராமரிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவு தங்களுக்கும் தாய்மார்கள் காட்ட வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்மார்கள் உடல் வலியை அதிகம் எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக பிறப்புறுப்பில் அதிக வலியை அனுபவிக்க நேரிடுகிறது.பிறப்புறுப்பில் தையல் போடப்படுவதால் சில மாதங்கள் நடப்பது மற்றும் அமர்வதில் அதிக சிரமம் ஏற்படும்.சிலருக்கு தையல் போட்ட இடத்தில் வலி மற்றும் காயங்கள் அதிகமாகி தொந்தரவை கொடுக்கும்.
சுகப்பிரசவித்த பெண்கள் வலியை குறைக்க ஒரு வட்ட வடிவ பாத் டப்பில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் 5 முதல் 10 நிமிடங்கள் உட்கார வேண்டும்.இப்படி செய்தால் பிறப்புறுப்பு தையல் வலி குறையும்.
பிரசவ காலத்திற்கு பிறகு பெண்கள் மூட்டு வலி,முதுகு தண்டுவட வலி போன்றவற்றை அனுபவிக்கின்றனர்.இந்த பிரச்சனை இருப்பவர்கள் மிருதுவான தலையணையை வைத்து அதன் மீது உட்காரலாம்.அதேபோல் முதுகிற்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் தலையணை வைத்து அமரலாம்.
பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனையை பல பெண்கள் சந்திக்கின்றனர்.இந்த பிரச்சனைகளில் இருந்து மீள ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.அவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஓய்வு தேவைப்படுகிறது.அறுவை சிகிச்சை தையல் குணமாகும் வரை அவர்கள் கடிமான வேலைகளை செய்யக் கூடாது.பிரசவ காலத்திற்கு பிறகு பெண்கள் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.இளகிய மலம் வர நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளலாம்.
அதேபோல் பிரசவித்த பிறகு பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிர்த்து தளர்வான உள்ளாடை அணியுங்கள்.இதன் மூலம் பிரசவ புண்கள் விரைவில் ஆறும்.