கனவில் கற்பழித்ததாக சாமியார் மீது இளம்பெண் புகார்! நடந்தது என்ன?

0
179
14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!
14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

கனவில் கற்பழித்ததாக சாமியார் மீது இளம்பெண் புகார்! நடந்தது என்ன?

பீகார் மாநிலலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை சாமியார் ஒருவர் கனவில் வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு இவர் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை குணப்படுத்த அருகிலுள்ள காளி கோயில் பூசாரியான பிரசாந்த் சதுர்வேதி என்பவரை சந்தித்துள்ளார். அவருடைய மகனை குணப்படுத்த அவர் ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்து, அத்துடன் சில சடங்கு முறைகளையும் பின்பற்றுமாறு கூறியுள்ளார்.

அந்த இளம்பெண் தன்னுடைய மகன் குணமாகிவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் சாமியார் கூறியபடியே தொடர்ந்து செய்துள்ளார். ஆனால்  15 நாட்களிலேயே அவர் மகன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் தான் அந்த பெண் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று  பூசாரி சதுர்வேதி மீது பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். அந்த புகாரில் சாமியார் சதுர்வேதி தன்னுடைய கனவில் வந்து கற்பழிக்க முயன்றதாகவும், இறந்து போன தனது மகன் தான் அவரை காப்பாற்றியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் புகாரை கேட்டு அங்குள்ள போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் போலீசாரிடம் அந்தப் பெண் இதுகுறித்து புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில், சாமியார் சதுர்வேதி தொடர்ந்து தனது கனவில் வருவதாகவும், பலமுறை தன்னை கனவிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சியான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி அஞ்சனி குமார் கூறியதாவது, “பாலியல் குற்றசாட்டு குறித்து சதுர்வேதிக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் வந்ததாலும்,மேலும்  அந்தப் பெண்ணை சமாதானப்படுத்துவதற்காகவும், நாங்கள் குற்றம்சாட்டப்பட்ட சாமியாரை அழைத்து வந்து விசாரித்தோம்.

ஆனால், இந்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட அந்த பெண் யாரென்று தனக்கு தெரியவில்லை என சதுர்வேதி மறுத்தார். மேலும் மகன் இறந்துபோன துக்கத்தில் அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் போல் இருக்கிறார்’ என்றும் கூறியுள்ளார். கனவிலேயே கற்பழித்ததாக அந்தப் பெண் கொடுத்த இந்த பகீர் குற்றசாட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleஇயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!
Next articleசீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு