ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

Photo of author

By Divya

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

Divya

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுவதால் குறைந்த வயதிலேயே பல நோய்களை சந்திக்கின்றனர்.திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை.பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் டிவி பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவது,தூங்குவது என்று இதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் பின்னாளில் மன அழுத்தம்,மன உளைச்சல்,கவலை,எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது.

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தினால் மட்டுமே நீண்ட காலம் வியாதிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியும்.வீட்டு வேலைகளை முடித்த பிறகு தங்களுக்காக நேரத்தை ஒதுக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி,ஜாகிங் செல்லுதல்,உடற்பயிற்சி செய்தல்,தியானம்,யோகா செய்தல் போன்ற பழக்கத்தை கடைபிடித்தால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.உங்களுக்கு நடனமாடுவது பிடிக்கும் என்றால் பிடித்த பாடல் போட்டு ஆடுங்கள்.இதனால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறிவிடும்.உடலை நன்றாக அசைத்தல்,கால் பாதங்களுக்கு அழுத்தம் கொடுத்து டான்ஸ் ஆடுதல் போன்றவற்றின் மூலம் உடலில் பிளட் சர்குலேஷன் நன்றாக இருக்கும்.இதனால் சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து பாதங்களை வைத்து தேய்த்து கழுவினால் இரத்த ஓட்டம் சீரக இருக்கும்.உடலில் இரத்த ஓட்டம் சீரக இருந்தால் நோய் பாதிப்புகள் அபாயம் குறையும்.அதேபோல் உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டும்.உடல் கழிவுகள் மலம்,சிறுநீர் மற்றும் வியர்வையாக சரியாக வெளியேறினால் ஆரோக்கியமாக வாழலாம்.

உடல் கழிவுகளை வெளியேற்றும் பானம்:

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)சீரகம்
3)எலுமிச்சை சாறு
4)புதினா இலை

செய்முறை விளக்கம்:-

முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து இந்த சீரக நீரை சிறிது ஆறவைத்து ஒரு எலுமிச்சம் பழச்சாறை அதில் பிழிந்து நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறிவிடும்.