தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.கடந்த காலத்தைவிட தற்பொழுது பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மோசமானதாக மாறிவிட்டது.ஆண்களுக்கு உடல் நலக் கோளாறுகளைவிட பெண்களுக்கு அதிக அதிகம் ஏற்படுகிறது.
இந்த மோசமான பிரச்சனைக்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வேறு சில உடல் நலக் கோளாறுகள்தான்.கருப்பை தொடர்பான பாதிப்புகளால் தற்பொழுது பல பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குழந்தை பெற்ற பெண்கள் கருப்பை இறக்கப் பிரச்சனையை சந்திப்பது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.பெண்களின் பிறப்புறுப்பு பகுதியை நோக்கி கருப்பை இறங்குவதைதான் கருப்பை இறங்குதல் என்று அழைக்கின்றோம்.
இந்த கருப்பை இறக்க பாதிப்பு வயதான பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரசவித்த பெண்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டால் கருப்பை இறக்கம் வரலாம்.அதேபோல் பிரசவித்த பெண்கள் அதிக எடையுள்ள பொருளை தூக்கினால் கருப்பை இறக்கம் ஏற்படும்.
கருப்பை இறக்க அறிகுறிகள்:
1)இடுப்பு வலி
2)பிறப்புறுப்பு பகுதியில் புண்
3)பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு,எரிச்சல் மற்றும் துர்நாற்றம் வீசுதல்
4)அதிக சிறுநீர் வெளியேற்றம்
5)தும்மல் பொழுது சிறுநீர் கசிதல்
6)அதிக வெள்ளைப்படுதல்
7)மலம் கழிப்பதில் சிரமம்
8)மாதவிடாய் காலத்தில் அதீத இரத்தப்போக்கு உண்டாதல்
இந்த கருப்பை இறக்கத்தை தென்னம் பூவை வைத்து சரி செய்யலாம்.தென்னை மரத்தில் இருக்க கூடிய தென்னம் பூ தான் இளநீர்,தேங்காயாக மாறுகிறது.இந்த தென்னம் பூவில் பொட்டாசியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,மாங்கனீசு,நார்ச்சத்து,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.
ஒரு கப் அளவிற்கு தென்னம் பூவை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரில் இந்த தென்னம் பூவை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் மூன்று தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தென்னம் பூ ஜூஸை வடிகட்டி குடித்து வந்தால் கருப்பை இறக்க பிரச்சனை சரியாகும்.கருப்பையில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற இந்த தென்னம் பூ ஜூஸை பருகலாம்.