பிரசவித்த பெண்கள் இதை செய்தால் பேஸ் பிரைட்டாக மாறும்!! இப்போவே இப்படி செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் மனதளவில் பல மாற்றங்களை காண்கின்றனர்.பொதுவாக பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக பொலிவாக காண்பார்கள்.ஆனால் பிரசவித்த பிறகு முகப் பொலிவு நீங்கி பருக்கள்,கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

பிரசவித்த பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு,தூக்கமின்மை போன்ற காரணங்களால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.குழந்தையை பார்த்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தவேண்டி இருப்பதால் நேரமின்மையால் தாய்மார்கள் தங்கள் சருமத்தை பராமரிக்க தவறுகின்றனர்.இதனால் சருமம் பொலிவற்று காணத்தொடங்குகிறது.

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள சில அழகு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் தேங்காய் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை க்ளீன் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் வறட்சி நீங்கி ஸ்கின் மிருதுவாக இருக்கும்.

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புது பொலிவு கிடைக்க முகத்தை காய்ச்சாத பாலில் கழுவ வேண்டும்.பாலில் இருக்கின்ற லாக்டிக் அமிலம் முக சுருக்கத்தை குறைகிறது.

உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் பருக்கள்,கரும் புள்ளிகள் ஏற்படும்.எனவே ஐஸ்கட்டி கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கி முகம் பொலிவாக மாறும்.உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைத்தால் உடல் புத்துணர்வு பெற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதனால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.அதிகம் தண்ணீர் பருகுவதால் சரும வறட்சி,பருக்கள்,கரும் புள்ளிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறையும்.