காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

0
122

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் டி 20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஹர்மன்ப்ரித் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் தனது விக்கெட்டை இழந்த பிறகு இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

இதையடுத்து இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. திறமையாக விளையாடிய ஆஸி அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

Previous articleபட்டதாரிகளே இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பிக்கவும்!
Next articleஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா!