தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!
21 வயது இளம்பெண் 250 குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உதவி புரிந்ததால் பொதுமக்களிடே பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்திர பிரதேர மாநிலத்தின் நித்தோரா கிராமத்தைச் சேர்ந்த கோமல் என்ற இளம்பெண் தனது கிராமத்தில் பெருமளவு இருக்கும் திறந்தவெளி கழிப்பறை கலாச்சாரத்தை மாற்றும் வகையில் 250 குடும்பங்களுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த சமூக சேவையில் தன்னால் முடிந்த பெரும் உதவியை தனது கிராமத்திற்கு செய்துள்ளார். திறந்த வெளியில் மலம் கழிக்க சென்ற பெண்களை கற்பழிக்கும் சம்பவங்கள் வட மாநிலங்களில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.
இந்த சாதனையை செய்வதற்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட தடங்கல் மற்றும் அவமதிப்புகளை அவரே வருத்தமுடன் “தி பெட்டர் இந்தியா” என்கிற உரையாடலில் கூறியுள்ளார். மக்களிடம் இதைப்பற்றி எடுத்துக் கூறி புரியவைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இந்த வேலை எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. உனக்கு வேறு வேலையே இல்லையா என்று பலர் கேலி செய்தனர். சிலர் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதையும் தனது உரையாடலில் கோமல் தெரிவித்துள்ளார்.
டெல்லி நகரத்தில் பிறந்து வளர்ந்த கோமலுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பின் தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு கழிவறை போன்ற எந்த வசதிகளும் கிடையாது. தினமும் காலையில் மற்ற பெண்களுடன் திறந்தவெளிக்குதான் செல்லவேண்டிய கட்டாயம். இதனையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் ஊர் தலைவர், சில அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளின் மூலம் கழிவறை கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கோமல். கிராம விவசாயிகள் & அரசு ஆதரவின் மூலம் கழிவறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலமாக 250 குடும்பத்திற்கான கழிவறைகளை கோமல் கட்டிமுடித்தார்.
தனது கிராமத்தில் பல்வேறு குடும்பங்களுக்கு கழிவறை கட்டி கொடுத்த காரணத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தினாலும், அனைத்து மக்களுக்காக அடிப்படை வசதி 100% எல்லாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மையாகும். தனது கிராமத்தில் கழிவறை வசதியில்லாத குடும்பங்களுக்கு உதவிய கோமலுக்கு பொது மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோமலின் சிறப்பான சமூக சேவையை கடந்த 2019 ஆம் ஆண்டு பாராட்டி நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் பாராட்டினார்.