மகளிர் உரிமை தொகை இவர்களுக்கு மட்டும் தான்!! அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!!
தமிழகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரில் வரும் செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் கடும் விமர்சனம் செய்த நிலையில், தமிழக மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், இந்த மகத்தான திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் எவ்வித தொய்வும் இன்றி, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் யார் யாருக்கு இந்த தொகை கிடைக்கும் என்பது தெரியவரும்.
அதற்கு சிலர் ஏழாயிரம் கோடி பணத்தில் எத்தனை பேருக்கு தர முடியும் என்று கணக்கு போடுகிறார்கள், ஒரு திட்டம் அறிவிக்கப்படும் போது தோரயமாக தான் நிதி ஒதுக்கபடுவதகவும், பின்னர் அதன் தேவைகளை கருத்தில் கொண்டு அதிகப்படியான நிதி ஒதுக்கப்படுவது மரபு தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என கூறினார்.
முழுமையான அரசாணை வெளியிட்ட பின் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் போது தெரியும் எத்தனை பேர் இந்த திட்டத்தால் பயன் அடைவார்கள் என்று கூறிய அமைச்சர் கீதாஜீவன், முதியோர் உதவி தொகை வாங்கும் பெண்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று கூறியுள்ளார்.
பெறும் அந்தஸ்து உடையவர்கள், அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் இந்த திட்டத்தை விரும்பமட்டார்கள், எனவே தகுதி உடைய பெண்களுக்கு நிச்சயம் இந்த திட்டம் போய் சேரும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என கூறினார்.