இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
381
Women's rights scheme for them too!! Notification released by Tamil Nadu Govt.
Women's rights scheme for them too!! Notification released by Tamil Nadu Govt.

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 வழங்கப்படும் என்று கூறி மக்களின் பல வாக்குகளை பெற்றுவிட்ட பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் என புதிய விதிமுறைகளை வரையறுத்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பல கோரிக்கைகள் வைத்தனர்.

இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமை தொகை வழங்கும் படி அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்து அவதூறாகவே பேசி வந்தனர்.இதனால் பெண்கள் என அனைவரின் அதிருப்தியையும் திமுக தற்பொழுது சம்பாதித்து வைத்துள்ளது.

தற்பொழுது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி வாக்குக்களை கவர உரிமைத்தொகையானது அனைவருக்கும் கிடைக்க வழி வகை செய்வதாக கூறியுள்ளது.அந்தவகையில் மறுவாழ்வு மையத்தில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.அதுமட்டுமின்றி முன்னாள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது என்று முதலில் கூறியிருந்தனர்.

தற்பொழுது அரசு ஊழியர்களின் வாக்குகள் ஏதும் திமுகவிற்கு சாதகமாக இல்லாததை அறிந்த முதல்வர், ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவது குறித்து கலந்தோசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.அதேபோல இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதி பெற்றும் பணம் பெறாத நபர்களுக்கு இம்மாதம் இறுதியில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து நாடளுமன்ற தேர்தல் பரப்புரையில் உதயநிதி கூறியதாவது,  கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பித்து பணம் வராத அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.அந்தவகையில் முதற்கட்டமாக தற்பொழுது மறுவாழ்வு மையத்தில் உள்ள பெண்களுக்கு வழங்க ஆணை வெளியாகியுள்ளது.

Previous articleஎன்னை நீ அந்த மாதிரி தான் கூப்பிடனும் என்று விஜய் சொன்னார்!! எனக்கு அது கூச்சமாக இருந்தது!! மனம் திறந்த 33 வயது நடிகை!
Next article3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம்