மகளிர் உதவித்தொகை தொடக்க விழா இங்கு தானா?? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
118
Women's Scholarship Inauguration Ceremony Here?? Important announcement released by Tamil Nadu Government!!
Women's Scholarship Inauguration Ceremony Here?? Important announcement released by Tamil Nadu Government!!

மகளிர் உதவித்தொகை தொடக்க விழா இங்கு தானா?? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றது.

அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த உதவிதொகையின் மூலம் மட்டும் தமிழகத்தில் சுமார் 1 கோடி இல்லத்தரசிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் உதவித்தொகை வழங்க உள்ள திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணபங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு டோக்கன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதற்காக மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உதவித்தொகை பெற விரும்பும் பெண்களுக்கு கட்டயம் 21வயது நிரம்பி இருக்க வேண்டும்.அவர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

தகுதி வாயிந்த குடும்பத்தலைவிகளின் விண்ணபங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் இதுவரை மட்டும் சுமார் 50 லட்சம் விண்ணபங்கள் பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் இரண்டாம் கட்ட விண்ணபங்கள் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.மேலும் இந்த திட்டம் முதலில் எங்கு தொடங்கப்பட உள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாக வில்லை.

இந்த நிலையில் இந்த விழா அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் பிரமாண்டமாக தொடங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Previous articleபுதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
Next articleஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…