பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இறுதி ஆட்டத்திற்கு நடுவராக நியமனம் செய்யப்பட்ட இந்திய பெண்மணி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் தெரியுமா!

Photo of author

By Sakthi

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கிடையிலான இறுதி போட்டி கிறைஸ்சர்ச் நகரில் நாளையதினம் நடைபெறுகிறது.

இந்திய நேரத்தின் அடிப்படையில் காலை 6 மணி அளவில் ஆரம்பித்து நடைபெறவிருக்கிறது இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் நடுவராக இந்தியாவைச் சார்ந்த ஜிஎஸ் லட்சுமி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடுவர் குழுவில் இடம் பிடித்த முதல் பெண் என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த ஜிஎஸ் லட்சுமிக்கு இருக்கிறது ஏற்கனவே ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் இதே பணியை செய்து இருக்கிறார் லாரன் ஆகென்பேக்.

இவர் தென்னாப்பிரிக்காவை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்தவர்களும் இந்த பணியை செய்யவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.