இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக சரியும் நோய் தொற்று பாதிப்பு!

0
76

நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பான தகவலை நாள்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதேபோல மாநில அளவிலான நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட தகவலை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன இதன் காரணமாக, பரவி வரும் நோய் தொற்று தொடர்பான தகவல்கள் மறைக்கப்படாமல் அது தொடர்பான அனைத்து தகவலும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரிந்து வருகிறது.

அதனடிப்படையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதனடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,260 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பான 1,335ந்தைவிட குறைவு.

இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,27035 என அதிகரித்திருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 1,404 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,24,92,326 என்று அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 13,445 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனாலும் நோய் தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இந்தியாவில் நோய் தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கை 5,21,264 என அதிகரித்திருக்கிறது. அதேசமயம் நாடுமுழுவதும் இதுவரையில் 184,52,44,856 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.