பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன்  தொடரை தொடங்கியது மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி!!

0
42
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன்  தொடரை தொடங்கியது   மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி…
தற்பொழுது நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் 9வது சீசன் தொடங்கி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 9வது சீசனில் 32 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாடி வருகின்றது.
இந்த 9வது பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி ஹெச்(H) பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து சிட்னியில் உலகத் தரவரிசையில் 72வது இடத்தில் இருக்கும் மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி முதல் போட்டியில் உலகத் தரவரிசையில் 17வது இடத்தில் இருக்கும் தென்கொரியா பெண்கள் கால்பந்து அணியை எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியா பெண்கள் கால்பந்து அணியை தோற்கடித்தது. இப்டிசம் ஜிராய்டி என்ற வீராங்கனை போட்டியில் ஆறாவது நிமிடத்தில் அடித்த கோல் மொராக்கோ பெண்கள் கால்பந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. மேலும் உலகக் கோப்பை தொடருக்கு அறிமுக அணியான மொராக்கோ பெண்கள் கால்பந்து அணிக்கு உலகக் கோப்பை தொடரில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
ஹெச் பிரிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டு வெற்றிகள் பெற்று கொலம்பியா பெண்கள் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கொலம்பியா அணி கிட்டத்தட்ட இரண்டாவது சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கி விட்டது. கொலம்பியா பெண்கள் அணியை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் மொராக்கோ பெண்கள் கால்பந்து அணிகள் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் தென்கொரியா 0 புள்ளியுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றது.
ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி நடைபெறும் போட்டிகளில் தென்கொரியா பெண்கள் கால்பந்து அணியும், ஜெர்மனி பெண்கள் கால்பந்து அணியும் மோதுகின்றது. மற்றொரு போட்டியில் கொலம்பியா பெண்கள் கால்பந்து அணியும், மொராக்கோ பெண்கள் அணியும் மோதுகின்றது.