2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்!!

0
49
2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்…
2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறாவிட்டால் இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்துள்ளது.
மங்களகிரி எனும் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கலாமா அல்லது  எதிராக வாக்களிக்கலாமா என்று விவாதம் செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு அவர்கள் “கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த முதல் கட்சி நமது தெலுங்கு தேசம் கட்சி தான். தற்போது அவர்களுக்கு வலிய சென்று ஆதரவு கொடுத்தாலும் நம்மை மதிக்காமல் புறக்கணித்து விடுகின்றனர். பாஜக கட்சியின் நிலைப்பாடு தெளிவாக தெரியவில்லை.
ஆந்திரா மாநிலத்தில் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வலுவான நிலையில் இருக்கின்றது. அதனால் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி அமைத்தால் மட்டும்தான் ஆட்சியை பிடிக்க முடியும். 2024ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் இனி எந்த தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். மேலும் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் தெலுங்கு தேசம் கட்சியும் எந்த தேர்தலிலும் போட்டியிடாது” என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் கூறியுள்ளார்.