தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை!
இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை ஒட்டி டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாடு முதல் இடத்தை வகித்தது. இந்நிலையில் மீண்டும் டெல்லியே முதலிடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஓர் காற்று நல்ல தரத்தில் இருக்கிறது என்றால் சராசரியாக 0-50 AQI என்ற அளவில் இருக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது டெல்லியில் காற்றின் தரம் 406 என்ற அளவில் உள்ளது. இதனால் டெல்லி, அதிக காற்று மாசுபாடு நிலையை அடைந்துள்ளது. இந்த காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் அதிக அளவில் பாதிபை சந்திக்ககூடும். அதனால் காற்றின் மாசுபாட்டை குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளி குழந்தைகள் இந்த காற்று மாசால் அதிகளவு பாதிப்பை சந்திக்கின்றனர்.எனவே இது குறித்து குழந்தைகள் ஆணையத்திற்கு டெல்லி அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.காற்றின் தரம் அதிக அளவு குறைய நேர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விட நேரிடும் என கூறுகின்றனர். அதேபோல காற்றின் மாசுபாட்டை குறைக்க தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் படி அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.