நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!

0
99
Write down the land.. otherwise I will kill you! The case that BJP jumped on the main point!
Write down the land.. otherwise I will kill you! The case that BJP jumped on the main point!

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!

பலரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவைக் கொண்டு மக்களை மிரட்டி, அவர்கள் நிலங்களை அபகரிப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் என்ற பகுதியில் ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் ஏபிசி மண்டச்சேரியில்  பள்ளி மற்றும் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டையும் பள்ளியையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது உறவினரான அகத்தினா சூர்யா என்பவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளனர்.

மேலும் அகத்தினா சூர்யாவின் கணவர் பாஜகவின் மாநில செயலாளர் ஆக பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் மூன்று ஆண்டுகள் விடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அகத்தினா, சூர்யாவிடம்  பள்ளி மற்றும் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளனர். ஆனால் அகத்தினா சூர்யா ஒப்பந்தம் முடிந்த நிலையிலும் அதே இடத்தில் வசித்து வந்துள்ளார். அது மட்டுமின்றி வாடகையும் தர மறுத்துள்ளார். மீறி வாடகை கேட்டாலும், அவரது கணவர் பதவியில் வகிப்பதால் அதை வைத்து மிரட்டி வந்துள்ளனர்.

எங்களால் பள்ளி மற்றும் வீட்டை காலி செய்ய முடியாது மீறி நீங்கள் கேட்டால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். இவ்வாறு மிரட்டியதன் அடிப்படையில் ஆர்த்தி தம்பதியினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், பாஜக மாநில செயலாளராக பதவி வைக்கும் சூர்ய சிவா எங்களது ஒரு கோடி மதிப்பிலான சொத்தை கொலை மிரட்டல் விடுத்து அபகரிக்க முயற்சிக்கின்றனர். அதுமட்டுமின்றி மூன்று வருட காலம் ஒப்பந்த முடிந்த நிலையிலும் வலுக்கட்டாயமாக 5 வருட கால ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் படியும் கட்டாயப்படுத்துகின்றனர்.

இதையெல்லாம் செய்து தரவில்லை என்றால் என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.இதனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடத்தின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.மேலும் தனது இடத்தை அவர்களிடமிருந்து மீட்டு தருமாறும் கேட்டுள்ளார்.