அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்!

Photo of author

By Divya

அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.50,000/- வரை ஊதியம்!

அரசு காப்பீடு நிறுவனமான GENERAL INSURANCE CORPORATION OF INDIA நிறுவனத்தில் காலியாக உள்ள “உதவி மேலாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வேலை வகை – அரசு வேலை

நிறுவனம் – GENERAL INSURANCE CORPORATION OF INDIA

பணி – உதவி மேலாளர்

காலியிடங்கள் – 85

கல்வித் தகுதி – உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – 30 வயதுக்குள் இருக்கும் நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் – மாதம் ரூ.50000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

பணிக்கான தேர்வு முறை

*எழுத்துத் தேர்வு(ஆன்லைன்)
*நேர்காணல் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்

பொது பிரிவினருக்கு விண்ணபக் கட்டணம் – ரூ.1000/-

மற்றவர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள் – 12-01-2024

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.gicre.in/images/FINAL_ADVERTISEMENT_FOR_2023_RECRUITMENT_22122023.pdf –