வளர்ந்து வரும் இந்த வலைதள காலங்களில் படித்தும், திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டு சூழ்நிலை காரணமாக பல இல்லத்தரசிகள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். இதில் நல்ல வேலை பார்த்து செட்டில் ஆகுபவர்களும் உண்டு. பலரும் முதலில் சிறிய தொகையை கட்டுமாறு கூறி அதில் லாபத்தை காட்டி பின்னர் பெரிய முதலீடு அவர்களை செய்ய வைத்து ஏமாற்றிவிட்டு செல்வதும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்தே இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வருகின்றது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கும் மேல் பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பெரும்பாலும் வெளிவந்த இல்லத்தரசிகர்களின் தகவல்கள் மட்டுமே. வெளிவராத தகவல்கள் எத்தனையோ? ஒரு ஃப்ரம் ஹோம் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டினால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, எந்த ஒரு பண முதலீடு இல்லாமல் வேலை கொடுத்தால் மட்டும் அதன் நம்பகத்தன்மை பொருத்து மட்டுமே வேலை புரியுமாறு சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட் இல்லத்தரசிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.