சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

0
127
Workshop on CLSS Awas Portal in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today
Workshop on CLSS Awas Portal in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, ஹட்கோ, தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்டம் குறித்த ஒருநாள் இணையதள பயிலரங்கிற்கு சென்னையில் இன்று (23.01.2020) ஏற்பாடு செய்திருந்தது.  தென்னிந்தியாவில் உள்ள முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக  இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.  

இதில், 60 முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் 125 பேர் கலந்து கொண்டனர்.  இந்த பயிலரங்கின்போது, மானிய உதவியுடன் கூடிய கடன் திட்ட செயல்பாடு, கிளாப் (CLAP) இணையதளம், சர்வர் கட்டுமானக் கலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  முதல் நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது புள்ளி விவரங்களை தரமான முறையில் பராமரிப்பதுடன், கிளாப் வலைதளம் மற்றும் செல்போன் செயலியை பயனாளிகள் 100% பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்ட இணையதளத்தின் வெற்றி மற்றும் அதனை  செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.  தென்னிந்தியாவில் இருந்து இன்னும் அதிகளவில் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்குமாறு முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மாற்ற மேலாண்மைக்கான பிரச்சார இயக்கமான அங்கீகார் (ANGIKAAR) குறித்த விழிப்புணர்வு அம்சங்களும் முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், மானிய உதவியுடன் கூடிய கடனுதவித் திட்ட பயனாளிகளுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து நிதிச் செலவின அறிவாற்றல் குறித்த முகாம்களை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைகளின்படி, நிதிச் செலவின அறிவாற்றல் குறித்து, நேரடி கலந்துரையாடல் வாயிலாக கலந்தாய்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சி குறித்த கேள்வி-பதில் அரங்கம் ஒன்றும் நடத்தப்பட்டது.    இந்த அரங்கம் முதல் நிலை கடன் வழங்கும் நிறுவனங்களான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக ஹட்கோ நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Next articleமனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !