தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

0
190

சென்னை மாநகராட்சியை உலக அளவில் தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ரூ.1100 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.296 கோடி கடன் வழங்க உள்ளது உலக வங்கி.

நேற்று  உலக வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த கடன் தொகை கல்வி நிலையங்கள், கழிவுநீர் மேலாண்மை, சுகாதார சேவை மையங்கள், சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!
Next articleநாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!