வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.?
வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தி வரும் சம்பவம் உலக நாடுகளிடையே வேறு விதமான பார்வையை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்கா, சைனா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளும் இந்த வைரஸால் ஆடிப்போய் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், கொரோனா தடுப்பு தேவைக்கான நிவாரண நிதியையும் பொதுமக்களிடம் இருந்து வாங்கி அதிகப்படியான சிகிச்சையை உண்டாக்கி நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆபத்தான சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனையை செய்து வருவது பல்வேறு நாடுகளை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு இல்லாததை விட தற்போது அதிகளவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வடகொரியாவின் கடலோரப் பகுதியான வொன்சன் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு பாயும் 2 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. இந்த ஏவுகணைகள் குறைந்தபட்சமாக 230 கி.மீட்டர் உயரத்திலும் அதிகபட்சமாக 30 கி.மீட்டர் உயரத்திலும் பறந்ததாக தென்கொரியா தளபதிகள் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் அனைத்து நாடுகளும் சிக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் வேளையில், வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை மிகவும் பொருத்தமற்றது என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று
தென் கொரியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக யோன்ஹாப் என்னும் செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் ஏவப்பட்ட நான்கு சுற்று சோதனைகளில் 8 வது ற்றும் ஒன்பதாவது சோதனையாக கூறப்படுகிறது.
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை வல்லாதிக்க நாடுகளையே சற்று பயத்தில் ஆழ்த்தியது ஒருபக்கம் இருந்தாலும் தற்போதைய சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை தேவையற்றதாகவே பார்க்கப்படுகிறது.