உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!!

0
163
#image_title

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! ஒரு இடத்திற்காக போட்டி போடும் மூன்று அணிகள்!!

நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டி போட்டு வருகின்றது.

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய பத்து அணிகள் பங்கேற்று லீக் சுற்றுகளில் விளையாடி வருகின்றது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை விளையாட வேண்டும். அந்த வகையில் ஒரு அணி தலா ஒன்பது போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் தற்பொழுது இந்தியா உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்தியாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் நேற்றைய(நவம்பர்7) லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்றாவது அணியாக நடப்பாண்டு உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மீதம் உள்ள ஒரு அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கு தற்பொழுது நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு ஒரே ஒரு லீக் போட்டி மட்டும்தான் மீதம் உள்ளது. மூன்று அணிகளும் தலா 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் நியூசிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். அதே போல தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். மூன்று அணிகளில் எந்த அணி அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுமோ அந்த அணி நான்காவது அணியாக அறையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

Previous articleதீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!!
Next articleஓபிஎஸ்க்கு இடிமேல் இடி! இபிஎஸ் பக்கம் சாயும் முக்கிய புள்ளிகள்!! பரபரக்கும் அரசியல் களம்!!