தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!!

0
42
#image_title

தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!!

நம் நாட்டில் தீபாவளி பண்டிகையானது ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனிப்பு, புத்தாடை, பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை கிடையாது.

தீபாவளி அன்று நாம் அதிகளவு பட்டாசு வெடிப்பதினால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. ஏற்கனவே நம் இந்தியாவில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் காரணத்தினால் தீபாவளி அன்று வெடிக்க கூடிய பட்டாசுகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும் மென்று பசுமை பட்டாசுகளை அரசு அறிமுகப்படுத்தியது.

இருந்த போதும் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்து இருக்கிறது. ஏற்கனவே தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தி இருக்கிறார்.

*உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே விற்க மற்றும் வெடிக்க வேண்டும்.

*தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

*வாகனங்கள், பெட்ரோல் நிலையங்கள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.

*மருத்துவமனைகள் அருகே அதிக ஓசையை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*பட்டாசுகளைக் கொளுத்தி மேலே தூக்கி எறிந்து வேடிக்கை பார்க்க முயற்சி செய்யக்கூடாது.

*எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.

*மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும்.

*குடிசை பகுதி மற்றும் மாடி கட்டடங்கள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

*பட்டாசு ஈரமாக இருந்தால் அதை சமையலறையில் உள்ள கேஸ் தீயில் உலர்த்தக் கூடாது.

*குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.

*பட்டாசு விற்பனை கடைகள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

*பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் பாதுகாப்பிற்காக தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.

*பட்டாசு வெடிக்க வில்லை என்றால் அதை கையில் எடுத்து பார்க்க கூடாது.

*பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சியோ, நெருப்பையே உபயோகிப்பதை விட நீளமான ஊதுபதியை பயன்படுத்தலாம்.

*பாதுகாப்பற்ற நிலையில் பட்டாசு வெடித்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

*எரியும் விளக்கின் அருகினில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

*பட்டாசு வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை உபயோகித்து வெடிக்க கூடாது.

*பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் எக்காரணத்தை கொண்டும் சிம்னி விளக்கையோ, பெட்ரோமாக்ஸ் விளக்கையோ கடைகளில் வைக்க கூடாது.

*பட்டாசு வெடிக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை எண் 101 மற்றும் காவல் துறை எண் 100 உள்ளிட்டவைகளை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம். உள்ளிட்ட 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விதித்து இருக்கிறார்.