நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!!

Photo of author

By Sakthi

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!!

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி இறுதி போட்டி என்று அழைக்கப்படும் நாக்அவுட் சுற்றுக்களுக்கான பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே குறித்த அறிவிப்பை ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் கடந்த நவம்பர் 12ம் தேதி முடிந்துள்ள நிலையில் நாளை(நவம்பர்15) முதல் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி பெட்டிகள் தொடங்கவுள்ளது.

நாளை(நவம்பர்15) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் 9 வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும் 5 வெற்றிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளது. மறுநாள் அதாவது நவம்பர் 16ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும் 7 வெற்றிகள் பெற்று 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் விளையாடவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் நாக்அவுட் சுற்றுக்கள் என்று அழைக்கப்படும் அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கான ரிசர்வ்டே மற்றும் பரிசுத்தொகை பற்றிய முக்கிய அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்தால் ரிசர்வ்டே என்று அழைக்கப்படும் காத்திருப்பு நாள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்றும் மேலும் லீக் சுற்றுகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு 40000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மொத்த பரிசுத் தொகை பத்து மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.