உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

0
71
#image_title

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

தமிழகம், புதுவையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி, குளம் என்று அனைத்து நீர் நிலைகளும் அதிரடியாக நிரம்பி வருகிறது. இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை தாமதாக தொடங்கினாலும் இடைவிடாத மழையால் சாலை, விவசாய நிலங்கள் அனைத்தும் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

தொடர் கனமழை காரணமாக பயிரிடப்பட்ட நெல், ஆரியம், வாழை உள்ளிட்டவைகள் அழுகும் சூழலில் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறன்றனர்.

ஏற்கனவே தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கேரளா, தமிழகம், புதுவையை ஆகிய மூன்று மாநிலங்களையும் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் தற்பொழுது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டும் இன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் காஞ்சிபுரம், கடலூர் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறார்.