இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!

Photo of author

By Parthipan K

கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தை, இந்தியா அண்டை நாடான பல நாடுகளுக்கு பல லட்சம் டோஸ்களை கொடுத்து உதவி புரிந்து வருகிறது. இச்செயலுக்கு பல நாடுகளின் தரப்பிலும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.

அதாவது கொரோனா தடுப்பு மருந்துகளை வங்காளதேசம், மாலத்தீவுகள், பூடான், மியான்மார், நேபாளம், சீஷெல்ஸ் உள்பட பல அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியாகவும் இந்தியா கொடுத்துள்ளது.

இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை, இந்தியா ஜனவரி 20ஆம் தேதி முதல் அண்டை நாடுகளுக்கு இலவசமாக வழங்கி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது இச்செயலுக்காக உலக சுகாதார அமைப்பு இந்தியாவை பாராட்டியுள்ளது.

உலக சுகாதார துறை அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது: “இந்த கொரோனா நோயை எதிர்த்து போராடுகின்ற இந்த போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதாக பாராட்டினார்.

அத்துடன் இந்தியாவிற்கும் மற்றும் இந்திய நாட்டின் பிரதமர் – நரேந்திர மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் இதுபோன்றுதான் அறிவைப் பகிர்ந்து அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்”.