தொடங்கியது மூன்றாம் உலகப் போர்!! உண்மை உடைத்து உக்ரைன் ராணுவ அதிகாரி!!

Photo of author

By Vijay

ukraine: ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு பின் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாம் உலக போர் தொடங்கியதாக கூறிய உக்ரைன் ராணுவ அதிகாரி.

உக்ரைன் முன்னாள் ராணுவ அதிகாரி தளபதி வலேரி ஜலுஷ்னி மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார். உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா வடகொரியா, ஈரான், சீனா நாடுகளின் ஆகிய நாடுகளில் தலையீட்டை சுட்டிக்காட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் 3 ஆண்டுகள் நிறைவு செய்யும்.ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது உக்ரைன்.

இதற்கு இடையே அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் போர் விரைவில் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. என்னில் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் போரின் நிறுத்தி விடுவேன் என்று அறிக்கை விட்டிருந்தார். இதனால் உக்ரைன் ரஷ்யா போர் முடிவடையும் என பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிறுவியது.

ஆனால் அதற்கு மாறாக தற்போது உக்ரைன் மீதான ரஷ்ய போர் என்பது மிகவும் உக்கிரமடைந்துள்ளது. இதுகுறித்து உக்ரைனின் முன்னாள் தலைமை தளபதி வலேரி ஜலுஷ்ணி மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில் 3 ம் உலகப் போர் தொடங்கிவிட்டது ஏனெனில் உக்ரைன் மீதான போர் குறித்து அமெரிக்கா ரஷ்யா நேரடியாக தலையிடுகிறது.  இதனால் 2024 ல் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று நாம் முழுமையாக கருத முடியும் என்று கூறினார்.