ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மகேந்திர சர்மா கூறியதாவது,தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள சோன்ப் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது.கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த மைதானம் இரண்டு கட்டங்களாக கட்டப்பட உள்ளது.மொத்தம் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இம்மைதானம் அமைய உள்ளது.முதல் கட்டமாக 45 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட உள்ளது.இதன்பிறகு அடுத்த 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இந்த மைதானம் சர்வெத கிரிக்கெட் கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி கட்டப்படும்.இந்த மைதானமானது ரஞ்சி கோப்பை போட்டிகளில் பயன்படுத்தப்படும் இரண்டு பயிற்சி மைதானங்கள்,இரண்டு உணவகங்கள்,30 பயிற்சிவலைகள்,250 பத்திரிகையாளர்கள் அமரக்கூடிய அறை, நாலாயிரம் வாகனங்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதி ஆகியன இந்த மைதானத்தில் உள்ளடங்கும் என அவர் கூறியுள்ளார்.
அகமதாபாத்தின் மோட்டேரா மைதானம் ஆனது 1.10 லட்சம் பேர் அமரக்கூடிய மைதானமாக விளங்குகிறது.மேலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமானது 1.02 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் உள்ளது.இதனை அடுத்து மூன்றாவது பெரிய மைதானமாக ஜெய்ப்பூர் மைதானம் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.