எல்லையில் சீன போர் விமானங்கள் குவிப்பால் பரபரப்பு; மோடியின் திடீர் சந்திப்பு ஏன்.?

0
87

இந்தியா-சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக தொடர் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எல்லை பகுதியில் அடிக்கடி சீன இராணுவ ஊடுறுவல் நடப்பதால் இந்திய ராணுவமும் அதனை எச்சரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இரு நாட்டு இராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் லடாக் மோதலை தொடர்ந்து சீனா இராணுவ குவிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது போர் விமானங்களை நிறுத்தியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் எல்லை பாதுகாப்பு கருதி இந்திய தரப்பிலும் போர் விமானம் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுகோய் 30 மற்றும்
மிக் 29 ரக விமானங்களும் எல்லையில் கண்பாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும் லடாக் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணிக்காக நவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. இதில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மிக வேகமாக ராணுவ முகாம்களை தாக்கும் வல்லமை கொண்டதாகும். இந்த எல்லை சிக்கல் சம்பந்தமாக பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சர்வதே சிக்கல் மற்றும் தேசிய பிரச்சினை குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
Jayachandiran