சின்ன வயசுல சுருக்கம் வந்துவிட்டது கவலையா? இது ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

0
177

 சின்ன வயசுல சுருக்கம் வந்துவிட்டது கவலையா? இது ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!

வயதாகும் போது அனைவருக்கும் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இது இயற்கையில் நடக்கக் கூடியது. ஆனால் இப்போது எல்லாம் சிறு வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனை மறைக்க அதிக விலை கொடுத்து பல பொருட்களை வாங்கி பலர் பயன்படுத்தி வருகிறார்கள். சிறுவயதில் வருவதற்கு காரணம் தோலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகும். தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்வதால் தோல் சுருக்கம் விரைவில் ஏற்படாது. ஈரப்பதம் இல்லை என்றால் தோல் சுருக்கம் ஏற்படும். மேலும் அதிக நேரம் தூங்காமல் இருப்பதால் முகத்தில் உள்ள செல்கள் இறந்து கருவளையம் மற்றும் தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத அழகான முகத்தையே அனைவரும் விரும்புவார்கள். சராசரியாக ஒரு மனிதன் 8 மணி நேரம் தூங்குவதும் தண்ணீரை அதிகம் பயன்படுத்தினால் தோல் சுருக்கம் இளம் வயதில் ஏற்படாது. இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தோல் சுருக்கத்தை போக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்

சின்ன சீரகம்

கற்றாழை

எலுமிச்சை சாறு

தக்காளி ஜூஸ்

அரிசி மாவு

செய்முறை                                        முதலில் சின்ன  சீரகத்தை எடுத்து நன்றாக பொடி போன்ற அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியுடன் கற்றாழை, எலுமிச்சை சாறு ,தக்காளி ஜூஸ் இவைகளை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் அரிசி மாவு சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இரவு தூங்கும் முன் முகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் தோல் சுருக்கம் விரைவில் குணமடையும். மேலும் இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு வாரம் செய்து வருவதால் தோல் சுருக்கம் உடனடியாக குணமடையும் மேலும் இதனுடன் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகள் தோல் சுருக்கம் வராமல் தடுக்கும்.

Previous articleதினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!
Next articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!