தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

0
65

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.வெந்தயத்தில் வேதிப்பொருள் உள்ளதால் இருதய நோய் வருவதை தடுக்கிறது.

வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில் குறைக்கிறது.

வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி அடர்ந்து வளரும்.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.

இவ்வாறு வெந்தயத்தில் பல நன்மைகள் இருந்தாலும் அதனை நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் இன்னும் பயன் பெற முடியும்.

வெந்தய நீர் தயாரிப்பது

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.

1: இதை உட்கொள்ளும் முன் உங்களுக்கு அலர்ஜி மற்றும் பிற பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.

2: வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.

3: ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

4: செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

5: வெந்தயத்திற்கு கல்லீரலில் எல்.டி.எல் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதனால் அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது.

 

author avatar
Parthipan K